துரோகம்...

குறிக்கப்பட்ட
நாட்கள் நெருங்க
தொடங்கிவிட்டது
உன் பயணம் கசாப்பு வண்டியில் ...
இயற்கை மாற்றங்களை
முன்கூட்டி உணரும் நீ
கழுத்தின் மீதான கொலை சதியை
உணரமுடியவில்லை ...
உன்
வாழ்நாள் சேவைகள்
இனி உன்னை
வாழவைக்க போவதில்லை ..
மரணத்தை
மறுக்காமல்
உணர்ச்சிகளின்றி
எதிர்கொள்ள போகிறாய் ..
எனக்கு புரிகிறது
துரோகம் ..
மர்மமான
துயரமென்று...
Comments
ஆதரவுக்கு நன்றிகளுடன் ...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ,..
:( //
:-(((
அசைவம் சாப்பிடும் நான் இதற்குப் பின்னூட்டுவதே தவறுதான்.//
இன்றைய வாழ்க்கை
சூழ்நிலை அப்படி நண்பரே ..
ஆனால் பசுவதை என்பது
மனதை மிகவும்
வதைக்கும் ஒன்று ..
வருகைக்கு
நன்றிகளுடன்
உணவு மேஜையின் மேல் நாவூற சமைத்து வைத்த இறைச்சியின் பின்னால் உள்ள இரத்தக் காட்சியை உணர்த்துகிறது......//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே ..
அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ...
சமூகக் கண்ணோட்டத்துடன் கூடிய தங்களின் படைப்புகளை இன்னும் எதிர்பார்க்கலாமா?
ஏற்கவில்லை என்றாலும்
விட்டுவிடவா போகின்றனர்?
அதனால் தான் ஏற்றுக்கொள்கிறதோ என்னவோ?
பசு வதையும், சிசு வதையும் என்றுதான் தீருமோ?
கவிதையில் கலக்கம் கண்கூடாகத்தெரிகிறது...
கனக்கச் செய்கிறது மனதை ...
கவிதை நெஞ்சுக்குள் நெருப்பு வைக்கிறது