முடம்...

xc1
விதைத்த
விதைகள் முளைத்து
வளர்ந்து மரமாகி
பூவாகி காயாகி
மீண்டும் விதைகள் ...

நரம்புகள் தளர்ந்து
நசுங்கிய பாத்திரமாய்...
நட்ட கைகள்
இன்றோ நடுரோட்டில் ..
குஞ்சுகள் மிதித்து
முடமான கோழியாய் ...

Comments

தமிழ் said…
படிக்க படிக்க
ஒவ்வொரு வரிகளும்
மனத்தை
கனக்கிறது
Vishnu... said…
உண்மை தானே
முதியோர்களின் நிலைமை ..

வணக்கத்துடன் நன்றிகள்
திகிழ்மிளிர் அவர்களே ...
அவ்வப்போது வருகை தர வேண்டுகிறேன் ...

என்றும்
இனிய தோழனாக ..
விஷ்ணு
Anonymous said…
very nice congrulation
Vishnu... said…
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் தமிழ் பார்க்ஸ் அவர்களே ...

நன்றிகளுடன்
விஷ்ணு ,..
iraivanatuislam said…
ithai ulagil anai varum unarnthal muthiyor illame irukathu....
Vishnu... said…
உண்மை தான் நண்பரே நீங்கள் சொல்வது ...என்ன செய்வது யாரும் உணர்வதில்லையே ...

அடிக்கடி வருகை தர வேண்டுகிறேன் ....

அன்புடன்
விஷ்ணு ,..
Divya said…
மனம் கணமானது.......கடைசி வரிகளை படிக்கையில் கண்களில் நீர்:(
Vishnu... said…
என்னை
நானாக்க
என் தாய்தந்தையர்
மிக அதிகம் உடல் வருந்தினர் ..

இன்று நான் நல்ல நிலையில் இருந்தும் நலமாக அவர்களை கவனிக்க இறைவன் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை ....
என் அதிஷ்டம் அப்படி ...

அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ...திவ்யா அவர்களே ..

என்றும் இனிய தோழனாக ...விஷ்ணு
Unknown said…
ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சை நெகிழ வைத்தது..!! :(
Vishnu... said…
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ஸ்ரீ அவர்களே ..அடிக்கடி வர வேண்டுகிறேன்

அன்புடன்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
Divya said…
\\இன்று நான் நல்ல நிலையில் இருந்தும் நலமாக அவர்களை கவனிக்க இறைவன் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை ....
என் அதிஷ்டம் அப்படி ...\\

புரிகிறது....உங்கள் மனதில் வலியும் , வேதனையும்!

[can you please take off this pop-up option for comment]
Vishnu... said…
//Divya said...
[can you please take off this pop-up option for comment]//

உண்மை தான் ..சில நேரங்களில் மனம் மிக வேதனை அடையும் ..

நீங்கள் சொன்னதுபோலவே ..சரி செய்து விட்டேன் ..

நன்றிகளுடன்
விஷ்ணு ,..
Anonymous said…
மனது வலிக்கின்றது
Vishnu... said…
//இனியவள் புனிதா said...
மனது வலிக்கின்றது//

முதல் வருகைக்கும் மனம் கனிந்த கருத்துக்கும் நன்றிகலந்த வணக்கங்களுடன்
விஷ்ணு ...
ஹேமா said…
மனம் வலிக்கும் வரிகள் விஷ்ணு.
Vishnu... said…
// ஹேமா said...
மனம் வலிக்கும் வரிகள் விஷ்ணு.//

முதல் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஹேமா ...

அடிக்கடி வாருங்களேன் ..
thamizhparavai said…
நண்பர் விஷ்ணுவுக்கு...
மனதை இறுக்கிய கவிதை...
முதியோர்களைக் காண்கையில் கண்கள் திருப்பிக்கொள்ளும்போது என்னுள் கேள்வி எழும் 'முடமானது என் மனதுதானே?'...எதுவாவது செய்யவேண்டும்....செய்வேன் என்ற நம்பிக்கையில்....
Vishnu... said…
//தமிழ்ப்பறவை said...
நண்பர் விஷ்ணுவுக்கு...
மனதை இறுக்கிய கவிதை...
முதியோர்களைக் காண்கையில் கண்கள் திருப்பிக்கொள்ளும்போது என்னுள் கேள்வி எழும் 'முடமானது என் மனதுதானே?'...எதுவாவது செய்யவேண்டும்....செய்வேன் என்ற நம்பிக்கையில்....//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே ...

உண்மையில் நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதியை நினைக்கையில் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே ..

நம்மால் இயன்றதை
நாம்செய்யவேண்டும் ..
இயலும்போது தானே
செய்ய இயலும்

என்ன சரி தானே நண்பரே ..

அன்புடன்
விஷ்ணு
நண்பரே.. உங்களின் வரிகள் இறுகிய மனதையும் இளகச் செய்யும்,,,
கனத்த மனதுடன் கவிதை வரிகளையும் சுமந்து கொண்டு...
"முடம்"...
விதைகள் வளர்ந்து பயன் தரும் வேளையில் அறுவடை செய்து அனுபவிக்க அனுமதி மறுக்கப்படுகிறது..!
வளர்ந்து வரும் இளைய சமுதாயம் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்..!
கவிதை...மனத்தைக் கனக்கச் செய்கிரறது..நண்பரே..!
Anonymous said…
மனது கனக்கிறது சகோ:( முதுமை கொடுமையோ இப்பவே பயமா இருக்கே
Anonymous said…
மனது கனக்கிறது சகோ:( முதுமை கொடுமையோ இப்பவே பயமா இருக்கே

Popular posts from this blog

துரோகம்...

பயம் ...